அரசுக்கு எதிராக பாரிய போராட்டத்துக்கு தயாராகும் எதிர்க்கட்சி!

எதிர்வரும் 16ஆம் திகதி அரசுக்கு எதிராக மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்குப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தயாராகி வருகின்றது. கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தலைமையில் கொழும்பில் இந்தப் போராட்டத்தை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், விவசாயிகளின் பிரச்சினைக்கு உடன் தீர்வை வழங்குமாறும், அதிபர், ஆசிரியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துமே இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், தேசிய வளங்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படுவதற்கும் கடும் எதிர்ப்பு வெளியிடப்படவுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!