
இதன்படி, நாட்டின் அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் 10, 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்புகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கை கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, கல்விசார் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் கல்விசார் மற்றும் கல்விசாரா பணியாளர்களின் சேவையினை அறிக்கையிடுமாறு கோரப்பட்டுள்ளது.
அத்துடன், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளை உடைய பணியாளர்கள் பணிக்கு அழைக்கப்பட வேண்டிய அவசியமில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சுகாதார பரிந்துரைகளுக்கமைய மாணவர்கள் பாடசாலைகளுக்கு அனுப்பப்படுவதனை பெற்றோர்கள் உறுதிப்படுத்துமாறு கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!