புறக்கணிக்கிறது மொட்டு – மாற்றுப் பயணம் குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது!

பொதுஜன பெரமுன தங்களை புறக்கணிப்பதால் தாங்கள் இன்னுமொரு பயணம் குறிந்து சிந்திக்க வேண்டியுள்ளது என பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் தலைமை தன்னையும் பதினொரு கட்சிகளின் தலைவர்களையும் புறக்கணிக்கின்றது – நிலைமை மாறப்போவதில்லை. இதன்காரணமாக இன்னுமொரு பயணம் குறித்து நாங்கள் சிந்திக்க வேண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்களை பொதுஜனபெரமுன தலைமை கருத்தில் கொள்வதில்லை,ஆகஸ்ட் தேர்தலின் பின்னர் ஜனாதிபதியோ அல்லது வேறு எவரும் எங்களை சந்திக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மக்களின் பிரச்சினைகள் குறித்து அவற்றிற்கு தீர்வை காண்பதற்கு என்ன செய்யலாம் என்பது குறித்து ஆராய்வதற்காக பதினொரு கட்சிகளின் தலைவர்களும் இரண்டு வாரங்களிற்கு ஒரு முறை சந்திக்கின்றோம்,அதன் பின்னர் எங்கள் வேண்டுகோளை விடுக்கின்றோம்.

அரசாங்கம் அதனடிப்படையில் செயற்படும் என்றால் எங்கள் பிரச்சினைகளிற்கு தீர்வை காணமுடியும் என தெரிவித்துள்ள பேராசிரியர் திஸ்ஸ விதாரண அரசாங்கம் எங்கள் வேண்டுகோள்களை புறக்கணித்தால் நாங்கள் வேறு வழியை நாடவேண்டியிருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!