சீன கடன் விவகாரத்தில் மஹிந்தவின் அமைதி பாரிய சந்தேகத்தினை தோற்றுவித்துள்ளது – மங்கள சந்தேகம்

நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகை நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ எவ்வித அடுத்தக்கட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் அமைதி காப்பது அவர் மீது பாரிய சந்தேகத்தினை தோற்றுவித்துள்ளது என தெரிவித்த நிதியமைச்சர் மங்களசமரவீர சீன தூதரகத்துடன் இவ்விடயம் தொடர்பில் எவ்வித அடுத்தக்கட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அனுமதி கேட்க அவசியமில்லை. நியுயோர்க்டைம்ஸ் அனைத்து தகவல்களையும் வழங்க தயாராக உள்ளது . இவ்விடயத்தில் அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.

நிதியமைச்சில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்.

2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பணிகளுக்கு சீன நிறுவனம் 7.6 பில்லியன் கடனை வழங்கியதாகநியுயோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட செய்தியை ஊடகங்கள் வெளியிட்டமைக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பேராசியியர் ஜி. எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளமையானது ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுப்பதாகவே காணப்படுகின்றது.

மேலும் இவ்விடயங்கள் தொடர்பில் உள்ளுர் ஊடகவியலாளர்களை அசசுறுத்தல் வேண்டாம் என்றும் மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் தம்மை தொடர்பு கொள்ளுமாறு நியுயோர்க்டைம்ஸ் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் மைக்கல் ஸ்லெக்மன் குறிப்பிட்டுள்ளமையினை மஹிந்த தரப்பினர் பின்பற்ற வேண்டும்.

ஒரு சாதாரண மனிதர் தனக்க எதிராக பொய்யான குற்றச்சாடடை முன்வைத்தால் அதனை எதிர்த்து தனக்கு நியாயத்தினை பெற்றுக் கொள்ள முற்படுவார்கள் ஆனால் ஜனாதிபதி பதவி பகித்து தற்போது பாராளுமன்ற உறுப்பினராக செயற்படும் மஹிந்த ராஜபக்ஷ இவ்விடயம் தொடர்பில் அமைதி காப்பது பாரிய சந்தேகத்தினை தோற்றிவித்துள்ளது.

சீன தூதரகம் இவ்விடயம் தொடர்பில் மறுப்பினை தெரிவித்தமையினை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் எதிர் தரப்பினர் என தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!