பிஞ்சு குழந்தையை பெட்டிக்குள் வைத்து சுவற்றில் சமாதி கட்டிய அமெரிக்க தம்பதி!

அமெரிக்காவில், 25 வயது பெண் ஒருவர், தனது 5 மாத குழந்தையை வீட்டின் சுவற்றில் வைத்து சமாதி கட்டி, அதே வீட்டில் 8 மாதங்கள் மற்ற 3 பிள்ளைகள் மற்றும் காதலனுடன் வாழ்ந்துவந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியாவைச்ச சேர்ந்தவர் 25 வயதான கைலி வில்ட் (Kylie Wilt). அவர் தனது காதலன் 27 வயது ஆலன் ஹோலிஸ் (Alan Hollis) மற்றும் 5 மாத குழந்தை உட்பட மொத்தம் 4 பிள்ளைகளுடன் வசித்துவந்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம், இவர்கள் தற்போது இருக்கும் இடத்திலிருந்து மூன்று பிளாக்குகளுக்கு அப்பால் வேறொரு புது வீட்டிற்கு குடும்பத்தோடு குடியேறினர்.

இந்த நிலையில், கடந்த வாரம் மாநில குழந்தைகள் மற்றும் இளைஞர் சேவைகள் துறையின் (CYS) முகவர்கள் அவரது குழந்தை எங்கே என்று கேட்க அவரது வீட்டிற்கு வந்தது. அப்போது, குழந்தை வட கரோலினாவில் வேறொருவரால் பிராமரிக்கப்படுவதாக வில்ட் அவர்களிடம் கூறியுள்ளார்.
அந்த குழந்தை பிறக்கும்போது THC எனும் உடல்நல பிரச்சினையால் பாதிக்கப்பட்டதால், CYS அக்குழந்தையை பிறந்து பல மாதங்களாக விசாரித்து வந்தது. இம்முறை விசாரிக்கையில் அவர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

மீண்டும் அதிகாரிகளுடன் சென்று விசாரிக்கும்போது, வில்ட் வேறொரு அதிர்ச்சியூட்டும் தகவலை கூறினார். தனது 5 மாத குழந்தை பிப்ரவரியில் திடீரென நோய் காரணமாக இறந்துவிட்டதாக கூறினார்.

பின்னர், இது குறித்து போலிஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டு குழந்தை எங்கே, என்ன ஆனது என விசாரித்தனர். அப்போது, தனது குழந்தை இறந்த பிறகு பதற்றமடைந்ததாகவும், அவரும் அவரது காதலனும் உடனடியாக மற்ற 3 குழந்தைகளும், இறந்துபோன பிஞ்சு குழந்தையின் உடலை எடுத்துக்கொண்டு வேறு வீட்டிற்கு மாறியதாகவும் கூறினார்.

பின்னர், இறுதிச் சடங்கிற்கு தன்னிடம் போதிய பணம் இல்லாததால் குழந்தையை மறைத்து வைப்பதற்காக, ஒரு பிளாஸ்டிக் கவரில் சுற்றி, அதனை ஒரு பெட்டிக்குள் வைத்து, அப்பெட்டியை புது வீட்டின் சுவற்றுக்குள் ஒளித்து வைத்து, அதற்கு மேல் ஓவியத்தை மாட்டியதாகவும் வில்ட் பொலிஸாரிடம் கூறினார்.

இதனை செய்துவிட்டு, வில்ட் மற்றும் ஆலன் இருவரும் கடந்த 8 மாதங்களாக அதே வீட்டில் மற்ற 3 குழந்தைகளுடன் வாழ்ந்துவந்துள்ளார்.

இந்நிலையில், குழந்தையின் சடலம் கைப்பற்றப்பட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மேலும், குழந்தை இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. மேலும், குழந்தையின் மரணத்தை மறைத்தமை, சடலத்தை துஷ்பிரயோகம் செய்தல், நீதிக்கு இடையூறு செய்தல், பொதுநல மோசடி மற்றும் சாட்சியங்களை சிதைத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு வில்ட் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மேலும் குழந்தையின் தந்தை, ஆலன் ஹோலிஸ், சட்ட நிர்வாகம் அல்லது பிற அரசாங்க செயல்பாடுகளைத் தடுத்த குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!