பிரித்தானியாவில் பயங்கரம்: சக நண்பனை 70 முறை கத்தியால் குத்தி கொன்ற 15 வயது சிறுவன்!

பிரித்தானியாவில் 12 வயது சிறுவனை 70 முறை கத்தியால் குத்தி கொலை செய்து, தலையை துண்டிக்க முயற்சித்த 15 வயது சிறுவனுக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. நண்பனையே கொடூரமாக கொலை செய்த இந்த சிறுவனின் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

    
கடந்த 2020 டிசம்பர் 12-ஆம் திகதி, லிங்கன்ஷையரின் பாஸ்டனுக்கு அருகிலுள்ள ஃபிஷ்டாஃப்டில் உள்ள வனப்பகுதிக்கு, மார்செல் க்ரெஸ்ஸஸ் (Marcel Grzeszcz) எனும் 15 வயது சிறுவன் ஒரு பெரிய கத்தி மற்றும் லேடெக்ஸ் கையுறைகளுடன் ஆயுதம் ஏந்தியபடி சென்றான்.

அங்கு தனது வகுப்புத் தோழனான ராபர்ட்ஸ் பன்சிஸை (Roberts Buncis, 12) வரச்சொன்ன க்ரெஸ்ஸஸ், சிறிதும் பயமின்றி தனது நண்பனை 70 முறைக்கு மேல் கத்தியால் குத்தினான்.
பாதிக்கப்பட்ட சிறுவனின் வலது பக்கம், தோள்கள், கைகளில் காயங்கள் மற்றும் அவரது மண்டை ஓட்டில் ஆழமாக இறங்கியபடி தலையில் மூன்று கடுமையான வெட்டுக் காயங்கள் காணப்பட்டன. பிறகு அவனது தலையையும் துண்டிக்க க்ரெஸ்ஸஸ் முயற்சி செய்துள்ளான்.

லாட்வியாவில் பிறந்த பாதிக்கப்பட்ட சிறுவன் Roberts Buncis தனது ஒற்றைப் பெற்றோரான தந்தையுடன் வசித்து வந்தார். அவர் தனது 13-வது பிறந்தநாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கொலை செய்யபட்டார். பெரும் சோகத்தில் மூழ்கிய அவனது தந்தை Edgars தனது மகனின் ஆத்மா சாந்தி அடைய வேண்டிக்கொண்டார்.

கொலைவெறியை தீர்த்துக்கொண்ட Grzeszcz, ‘விடயங்கள் தவறாக நடந்தன’ என்பதை ஒப்புக்கொண்டு பேஸ்புக் மெசஞ்சரில் மற்ற நண்பர்களுக்கு செய்திகளை அனுப்பியிருந்தார்.
அவர் தனது பதிவில் ‘இது இப்படி நடந்திருக்க கூடாது’. மேலும் ‘அண்ணா நான் ஏதோ கெட்ட காரியம் செய்துவிட்டேன்’ என்றெல்லாம் எழுதியிருந்தான்.

இந்த நிலையில் பொலிஸார் விசாரணை செய்து, Grzeszcz-ஐ அவனது வீட்டுக்கே சென்று கைது செய்தனர்.

அப்போது கொலையாளியின் வீட்டைச் சோதனை செய்த பொலிசார், ராபர்ட்ஸின் இரத்தம் இருந்த கத்தியை ஒரு செடியின் பானையின் கீழ் கண்டெடுத்தனர்.

பிறகு, Grzeszcz குறித்து விசாரிக்கையில், அவன் ஒரு போதைப்பொருள் வியாபாரி என்பதும், ஆரம்பப்பள்ளியில் சக மாணவனை கத்தியைக் காட்டி மிரட்டியதற்காக பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டான் என்பதும் தெரியவந்தது.

இந்த வழக்கு நவம்பர் 10-ஆம் திகதி (திங்கட்கிழமை) லிங்கன் கிரவுன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

குற்றம் நிருபிக்கப்பட்ட நிலையில், 14 வயது Grzeszcz-க்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அதனைட் தொடர்ந்து நீதிபதியின் தீர்ப்பின் அடிப்படையில் கொலையாளி சிறுவன் மார்செல் க்ரெஸ்ஸஸ் இப்போது பெயரிடப்படலாம்,

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!