கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை

கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 27 குடும்பங்களைச் சேர்ந்த 57 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!