பிரித்தானியாவில் எளிமையாக திருமணம் செய்துகொண்ட உலகப்புகழ் மலாலா!

உலகளவில் புகழ்பெற்ற நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சைக்கு பிரித்தானியாவில் எளிமையான முறையில் திருமணம் நடந்துள்ளது. பெண் குழந்தைகள் கல்விக்காக போராடியதற்காக, பாகிஸ்தானை சேர்ந்த மலாலா யூசுப்சை மீது தாலிபான் பயங்கரவாதிகள் 2012ல் தாக்குதல் நடத்தினர்.
    
தலையில் குண்டு பாய்ந்த நிலையில் அவர் உயிர் தப்பினார். இதையடுத்து அமைதிக்கான நோபல் பரிசு வென்றுள்ள மலாலா (23) கடந்த ஜனவரியில் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் திருமணம் எதற்காக என புரியவில்லை என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அஸர் என்பவருடன் பிரித்தானியாவில் மலாலாவுக்கு நேற்று திருமணம் நடந்தது. இந்த தகவலை அவரே தனது அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், இன்று என் வாழ்வில் ஒரு பொன்னான நாள், அஸரும் நானும் வாழ்க்கைக்கு துணையாக இருக்க முடிவு செய்தோம்.

எங்கள் குடும்பத்துடன் பர்மிங்காமில் உள்ள வீட்டில் ஒரு சிறிய நிக்கா விழாவைக் கொண்டாடினோம். உங்கள் ஆசீர்வாதத்தை எங்களுக்கு அனுப்புங்கள்.
எங்கள் பயணத்தில் ஒன்றாக முன்னோக்கி நடப்பதில் மகிழ்ச்சியடைகிறோம் என பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!