ஜப்பானில் 30 ஆண்டுகளாக கழிவறை நீரை குடிக்க பயன்படுத்திய பிரபல மருத்துவமனை!

ஜப்பானில் பிரபல மருத்துவமனை ஒன்றில் குடிநீருக்காக கழிவறை நீரை 30 ஆண்டுகளாக விநியோகித்து வந்துள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் சூட்டாவில் உள்ள ஒசாகா பல்கலைக்கழக மருத்துவமனையிலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தும் இந்த தவறு கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்டது.

இங்குள்ள குடிநீர் குழாய்கள் கழிவறையுடன் பொருத்தப்பட்டுள்ளதை கண்டறிந்த பின்னரே, கழிவறை நீரை குடிக்க பயன்படுத்தியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து ஒசாகா பல்கலைக்கழக மருத்துவமனை நிர்வாகமே அக்டோபர் 20ம் திகதி வெளிப்படையாக அறிவித்துள்ளது. குடிநீர் குழாயை தவறாக கழிவறை குழாயுடன் பொருத்தியிருந்தாகவும் குறிப்பிட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில் சுமார் 120 குடிநீர் குழாய்களில் கோளாறு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழாய்கள் அனைத்தும் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் பொருத்தப்பட்டுள்ளது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

கழிவறை நீரையை இங்குள்ள ஊழியர்கள், நோயாளிகள் என அனைவரும் குடிக்கவும், கைகளை சுத்தம் செய்யவும், வாய் கழுவவும் பயன்படுத்தி வந்துள்ளனர்.

சமீபத்தில் அதிகரிக்கும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய புதிதாக கட்டுமானப் பணிகளை துவங்கிய ஒசாகா பல்கலைக்கழக மருத்துவமனை, குறித்த கழிவறை நீர் குடிநீராக பயன்படுத்தி வந்துள்ளதை கண்டறிந்தது.

தற்போது முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், மேலதிக நடவடிக்கைகள் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!