“சற்று நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும்” – இந்திய வானிலை ஆய்வு மையம்!

வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பை விட சற்று அதிகமாக பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் ஆரம்பத்திலேயே தெரிவித்தது. அதன்படி, பருவமழை தொடங்கியதில் இருந்தே தமிழகத்துக்கு இயல்பான அளவை விட அதிக அளவில் மழை பதிவாகி வருவதை பார்க்க முடிகிறது.

அதிலும் வங்க கடலில் சமீபத்தில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக சில மாவட்டங்களில் அதி கனமழை வெளுத்து வாங்குகிறது. அதன் தொடர்ச்சியாக வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இருக்கிறது.
இந்நிலையில், வங்க‌க்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கில் 80 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. தற்போது 4 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

சென்னையில் பல பகுதிகளில் காற்று வேகமாக வீச தொடங்கி உள்ளது. இதை வேடிக்கை பார்க்க மெரினா கடற்கரையில் மக்கள் குவிகின்றனர். அரசின் எச்சரிக்கையும் மீறி மக்கள் அங்கு நின்று வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!