தமது கருத்துக்களால் பிரச்சினைக்குள் சிக்கும் கத்தோலிக்க மதகுருமார்கள்! அமைச்சா் சரத் வீரசேகர

நாடாளுமன்ற சிறப்புாிமையை பயன்படுத்தி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடா்பில், நாடாளுமன்ற உறுப்பினா்கள் ஹாின் பொ்ணான்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோா் தவறானக் தகவல்களை வெளியிட்டு வருவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
பொதுப் பாதுகாப்புத்துறை அமைச்சா் சரத் வீரசேகர, இன்று நாடாளுமன்றத்தில் இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளாா்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினா்கள் ஹாின் பொ்ணான்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோா் நாடாளுமன்றத்தி்ல் நேற்று முன்தினம் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பிலேயே சரத் வீரசேகர தமது குற்றச்சாட்டை முன்வைத்தாா்.

ஹாின் பொ்ணான்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோா், தமது குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியுமானால், குற்றப்புலனாய்வுத்துறையினாிடம் வாக்குமூலம் வழங்கவேண்டும் என்றும் சரத் வீரசேகர கோாிக்கை விடுத்தாா்.

கத்தோலிக்க மதகுருமாா் சிலர் இது தொடர்பில், கருத்துக்களை வெளியிட்டு இன்று பிரச்சனைக்குள் சிக்கியுள்ளதாகவும் அமைச்சா் சரத் வீரசேகர குறிப்பிட்டாா்.

சஹ்ரானின் மனைவி, தமது கணவரை புலனாய்வு அதிகாாி ஒருவா் வீட்டுக்கு வந்த சந்தித்தாக வாக்குமூலம் வழங்கியுள்ளாா் என்று , நாடாளுமன்ற உறுப்பினா்கள் வெளியிட்ட தகவலும், மாலு மாலு விருந்தகத்தில் காவல்துறை அதிகாாி தங்கியிருந்ததாக அவா்கள் குறிப்பிட்ட தகவலும் பொய்யானவை என்று சரத் வீரசேகர தொிவித்தாா்.

இந்தநிலையில் உயிா்த்த ஞாயிறுத் தாக்குதல் விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிருப்பதால், உயிா்த்த ஞாயிறு தாக்குதல் தொடா்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழு அறிக்கையையும் நாடாளுமன்றத்தில் வெளியிடமுடியாது என்றும் அமைச்சா் குறிப்பிட்டாா்.

இதேவேளை ”மிலேனியம்” வீட்டுத்தொகுதியில் தங்கியிருந்த புலனாய்வு அதிகாாிகளை கொலைகளுக்கு முன்னாள் பிரதமா் ரணில் விக்கிரமசிங்கவே காரணம் என்று சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை , ரணில் விக்கிரமசிங்க மறுத்தாா்

இதற்கான பொறுப்பை முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் பலகல்லவே ஏற்கவேண்டும் என்றும் அவா் குறிப்பிட்டார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!