பெண் அதிகாரிகளுக்கு உயர் பதவிகள் கிடைக்க நிரந்தர ஆணையம் துணையாக இருக்கும்: ராணுவம் ஒப்புதல்!

இந்திய ராணுவத்தில் பணியாற்றும் பெண் அதிகாரிகளுக்கு உயர் பதவிகள் கிடைப்பதற்கு ராணுவ நிரந்தர ஆணையம் துணையாக இருக்கிறது. ஆனால், தங்களுக்கு அனைத்து தகுதிகள் இருந்தும், இந்த ஆணையத்தில் சேர்க்கப்படாமல் நிராகரிக்கப்படுவதாக 11 பெண் அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், நிரந்தர ஆணையத்தில் இவர்களை நவம்பர் 26ம் தேதிக்குள் சேர்க்கும்படி கெடு விடுத்தது. ஆனால், ஆணையத்தில் சேர்க்கப்படுவதற்கான சில தகுதிகளை இவர்கள் பூர்த்தி செய்யவில்லை என்று ராணுவ தரப்பில் கூறப்பட்டது.

இதை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், தனது தீர்ப்பை அமல்படுத்தாத ராணுவத்துக்கும், அதன் தலைமை தளபதிக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எச்சரிக்கையை விடுத்தது. இதனால், இவர்களை நிரந்தர ஆணையத்தில் சேர்ப்பதாக ராணுவம் நேற்று ஒப்புக் கொண்டது. இதன்மூலம், ராணுவத்தில் ஆண்களுக்கு நிகரான உயர் பதவிகளுக்கும் செல்லும் வாய்ப்பு இந்த பெண் அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!