ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணிக்கு பொதுமக்கள் கருத்துக்களை முன்வைக்க சந்தர்ப்பம்

ஒரே நாடு ஒரே சட்டம் எனும் ஜனாதிபதி செயலணிக்கு எதிர்வரும் 30 ஆம் திகதி வரை பொதுமக்கள் கருத்துக்களை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

ஒரே நாடு ஒரே சட்டம்எனும் ஜனாதிபதி செயலணி பொது மக்களிடன் கருத்துக்களை கேட்டறிவதற்கு தீர்மானம் மேற்கொண்டுள்ளநிலையில் குறித்த காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, நிறுவனங்கள்,குழுக்கள் மற்றும் தனி நபர்களின் எதிர்பார்ப்புகள், யோசனைகள் மற்றும் பரிந்துரைகள்ஆகியவற்றை ocol.consultations@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறுகோரப்பட்டுள்ளது.

அத்துடன், தபால்மூலம் அனுப்புபவர்கள், ஒரே நாடு ஒரே சட்டம் எனும் ஜனாதிபதி செயலணியின் செயலாளர், தபால்பெட்டி இலக்கம் 504, கொழும்பு எனும் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே எதிர்வரும்30 ஆம் திகதிக்கு முன்னதாக எதிர்பார்ப்புகள், யோசனைகள் மற்றும் பரிந்துரைகள் ஆகியவற்றைசமர்ப்பிக்குமாறு ஒரே நாடு ஒரே சட்டம் எனும் ஜனாதிபதி செயலணி கேட்டுக்கொண்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!