இலங்கை வருகிறார் ஐ.நாவின் விசேட அறிக்கையாளர்!

அடிமைத்துவத்தின் சமகால வடிவங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ரொமோயா ஒபொகாடா இம்மாதம் 26 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளார்.

இலங்கையில் சில தினங்கள் தங்கியிருந்து அடிமைத்துவத்தின் சமகால வடிவங்கள் தொடர்பில் ஆராய்ந்து ஐ.நாவிற்கு அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ள அவர், இவ்விடயத்துடன் தொடர்புடைய தகவல்கள் மற்றும் தரவுகளைத் தனக்கு அனுப்பி வைக்குமாறும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரியுள்ளார்.

குறிப்பாக தொழிலாளர் உரிமைகள், அடிமைத்துவம், வலுகட்டாயமாகத் தொழிலில் ஈடுபடுத்துதல், சிறுவர்களைத் தொழிலில் ஈடுபடுத்துதல் உள்ளடங்கலாக அடிமைத்துவத்தின் சமகால வடிவங்களுடன் தொடர்புடைய தகவல்களை அனுப்பிவைக்கலாம் என்று ரொமோயா ஒபொகாடா தெரிவித்துள்ளார்.

அதன்படி மேற்குறிப்பிட்ட விடயதானங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் தரவுகளை அதனுடன் சம்பந்தப்பட்ட தரப்பினர் ohchr-srslaveryShun.org என்ற மின்னஞ்சல் முகவரியின் ஊடாக ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் ரொமோயா ஒபொகாடாவிற்கு அனுப்பிவைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!