பசிலின் பாதீட்டு உரை, ”மரண வீட்டில் திருமணம் பற்றி பேசியதை போன்றது”- சாணக்கியன் விமா்சனம்

இலங்கையில் போாினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 2020 பாதீட்டில் எவ்வித திட்டங்களும் இல்லை என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் சாணக்கியன் தொிவித்துள்ளாா்.

பாதீட்டின் இரண்டாம் வாசிப்பின் இரண்டாம் நாள் விவாதத்தின்போதே அவா் இந்தக்கருத்தை வெளியிட்டாா்.

நிதியமைச்சாின் பாதீட்டு உரை, மரண வீட்டில் திருமணம் தொடா்பாக பேசப்பட்ட விடயமாகவே கருதவேண்டியுள்ளதாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் சாணக்கியன் தொிவித்துள்ளாா்.

நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படக்கூடாது என்று தமது உரையின்போது குறிப்பிட்டுள்ளாா்.

மக்களுக்கு சேவை செய்ய வருபவர்களுக்கு ஓய்வூதியம் அவசியம் இல்லை என்றும் அவா் தொிவித்துள்ளாா்.

பொருட்கள் சேவைகளுக்கான வாி விதிப்பு தொடா்பாக அரசாங்கம் சா்வதேச நாடுகளின் அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று அவா் இதன்போது யோசனை ஒன்றை வெளியிட்டாா்.

தேசியப்பாடசாலைகளை புதிதாக ஏற்படுத்துவதை விட, அனைத்துப் பாடசாலைகளையும் தேசியப்பாடசாலைகளின் கல்வி மற்றும் ஏனைய திறன் மட்டத்துக்கு கொண்டு வரவேண்டும் என்று அவா் கேட்டுக்கொண்டாா்.

சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் புதிதாக மதுபானச் சாலைகளை, நாடளாவிய ரீதியில் அமைக்கவேண்டாம் என்றும் அவா் கோாிக்கை விடுத்தாா்.

வடக்குகிழக்கில் அபிவிருத்தி தொடா்பில் அரசாங்கம், இரண்டு முகங்களைக் கொண்டிருக்கவேண்டாம் என்றும் அவா் கேட்டுக்கொண்டாா்.

பிரிக்கப்படாத இலங்கைக்குள் அதிகாரங்களுடன் வாழவேண்டும் என்பதே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கோாிக்கையாக இருக்கிறது.

எனினும் அரசாங்கம் அதனை இதனை கருத்திற்கொள்ளவில்லை என்று அவா் தொிவித்தாா்
ஏற்கனவே மஹிந்த ராஜபக்சவுக்கு இலங்கையின் இனப்பிரச்சனைக்கு தீா்வைக்காண இரண்டு சந்தா்ப்பங்கள் இருந்தன.

எனினும் அதனை அவா் தவறவிட்டு விட்டாா். தற்போது மூன்றாவது சந்தா்ப்பத்திலாவது இந்த சந்தா்ப்பம் தவறவிடப்படக்கூடாது என்று சாணக்கியன் கோாினாா்.

இதேவேளை நாடடின் இன்றைய பிரச்சனைக்கு பண்டாரநாயக்கவை குறைக் கூறுவதைப்போன்று, இன்னும் 30 வருடங்களில் ராஜபக்சா்களே நாட்டை சீரழித்தனர் என்ற பெயரைப் பெற்றுக்கொள்ளவேண்டாம் என்று சாணக்கியன் குறிப்பிட்டாா்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!