மீண்டும் கூட்டுறவு கூப்பன் முறைமை: சமல் ராஜபக்ச வெளிப்படுத்தியுள்ள விடயம்

குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டுமென நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ச (Chamal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு ஏதேனும் ஓர் வழியில் நிவாரணங்களை வழங்கக்கூடிய பொறிமுறைமை ஒன்று அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலளார்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,பொருட்களின் விலை நிர்ணயம் தொடர்பில் வர்த்தக அமைச்சரே தீர்மானம் எடுக்க வேண்டும், அது எனது துறை கிடையாது.சதொச நிறுவனத்தின் ஊடாக எவ்வாறு நிவாரணங்களை வழங்குவது என்பது குறித்து திட்டமிடப்பட வேண்டும்.

கடந்த காலங்களில் அமுல்படுத்தப்பட்ட கூட்டுறவு கூப்பன் முறைமையை மீள அறிமுகம் செய்ய நேரிடும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!