“தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்களுக்கு இதுதான் கதி” – அவுஸ்திரேலிய அரசு அதிரடி!

கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் ஆஸ்திரியாவும் ஒன்று. கடந்த ஒரு வாரமாக அங்கு கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி செலுத்தும் வேகத்தை அதிகரிக்க அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ஆனால் அந்நாட்டு மக்களில் ஒரு தரப்பினர் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்து வருகின்றனர். ஆஸ்திரியாவின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 65 சதவீதம் பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. எனினும் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் இன்னும் ஒரு டோஸ் தடுப்பூசி கூட போடாதவர்களாக உள்ளனர்.

இந்த நிலையில் ஆஸ்திரியாவில் தடுப்பூசி போட்டுக்கொள்ளதாவர்களுக்கு மட்டும் அந்த நாட்டு அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது. அதன்படி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளுதல், உணவு வாங்குதல் போன்ற வரையறுக்கப்பட்ட காரணங்களுக்காக மட்டுமே தடுப்பூசி போடாதவர்கள் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!