“விவசாயிகள் நிலைமை குறித்து மத்திய அரசு அக்கறை செலுத்தவில்லை” – ராகுல் குற்றச்சாட்டு!

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டத்தை தொடங்கி, 26-ந் தேதியுடன் ஓராண்டு முடிவடைகிறது. இ்ருப்பினும், விவசாயிகள் நிலைமை குறித்து மத்திய அரசு அக்கறை செலுத்தவில்லை என்ற பொருளில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், ‘‘விவசாயி பெயருக்கு முன்னால் ‘தியாகி’ என்று குறிப்பிட வேண்டிய நிலைமை வந்து விட்டது. இது மோடி அரசின் கொடுமை எல்லை மீறி விட்டதை காட்டுகிறது. நமக்கு உணவு வழங்கும் விவசாயிகளின் சத்யாகிரகத்துக்கு வணக்கம்’’ என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!