தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

அந்தமான் கடல் பகுதியில் கடந்த 13-ந் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவி வருகிறது.

இது இன்று (புதன்கிழமை) மேற்கு திசையில் நகர்ந்து, நாளை (வியாழக்கிழமை) தெற்கு ஆந்திரா-வட தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் கன மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதன்படி, இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, சேலம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!