பேரணிகளை நடத்தியவர்கள் மீது சட்டநடவடிக்கை!

சுகாதாரச் சட்டத்தை மீறி ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஏற்கனவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சமகி ஜன பலவேகயவின் ஏற்பாட்டில் நேற்று கொழும்பில் பல்வேறு பிரதேசங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட மக்களின் பங்கேற்புடன் போராட்டம் நடைபெற்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!