ஆர்ப்பாட்டம் செய்ய உரிமை உள்ளது!

எதிர்க்கட்சியினர் என்ற ரீதியில் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுப்பதற்கு அவர்களுக்கு உரிமை காணப்படுகிறது. ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கான உரிமையை எவராலும் தடுக்க முடியாது என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

“எதிர்க்கட்சியினர் என்ற ரீதியில் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுப்பதற்கு அவர்களுக்கு உரிமை காணப்படுகிறது. எவ்வாறிருப்பினும் கொவிட் நிலைமையைக் கருத்திற் கொண்டு அதற்கு ஏற்றாற்போல் ஏற்பாடுகளை செய்திருக்கலாம்.

காரணம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் அவை தொடர்பில் கவனம் செலுத்த முடியாது. பெரும்பாலானவர்கள் ஒரே இடத்தில் கூடியிருக்கும் போது எவ்வாறு தொற்று பரவும் என்பதை அனைவரும் அறிவர். எவ்வாறிருப்பினும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கான உரிமையை எவராலும் தடுக்க முடியாது. நாம் வேறு பயணத்தை ஆரம்பிக்கவில்லை.

மாறாக கட்சியை மேலும் வலுப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். கட்சியை வலுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வோம் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!