இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படும் வாய்ப்பு: அரசாங்கத்தை விட்டு வெளியேறும் உறுப்பினர்கள்

அரசாங்கத்தில் இருக்கும் பெருமளவு மக்கள் அரசாங்கத்தை விட்டு விலகுவதற்காக எதிர்க்கட்சியுடன் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) தெரிவித்துள்ளார்.

களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
சிலர் வெகுவிரைவில் அரசாங்கத்தை விட்டு விலகி மாற்றம் ஒன்று மேற்கொள்ள வேண்டிய அவசியத்தில் உள்ளனர்.

எதிர்வரும் காலங்களில் கூட்டு ஐக்கிய முன்னணி ஒன்றை உருவாக்கி தற்போதைய அரசாங்கத்தை வீழ்த்தி புதிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படும்.

வெகு விரையில் ஒரு நாள் காலை விடியும் போது அரசாங்கம் கவிழ்க்கப்பட்டு புதிய அரசாங்கம் உருவாகியுள்ளதென்ற செய்தியை வெளியிட முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!