பாரியளவில் டொலர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது – வர்த்தக அமைச்சர்

நாட்டில் பாரியளவில் டொலர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை குறிப்பிட்டார்.

மேலும், இதன் காரணமாக பொருட்களை இறக்குமதி செய்வதில் சிக்கல் நிலை ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், கொரோனா தொற்று காரணமாக சுற்றுலாத்துறை பாதிப்படைந்துள்ளதனால் அந்நிய செலாவணி குறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இதனால் நாட்டுக்கு பொருட்களை இறக்குமதி செய்வதில் சிக்கல் நிலை காணப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, அந்நிய செலாவணியை பெற்றுக் கொள்ள முடியாவிட்டால் பொருள் இறக்குமதி செய்வதற்கு கடன் கடிதங்களை வெளியிட முடியாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!