விமானிகளே தேவையில்லை: வரவிருக்கும் அசத்தல் தொழில்நுட்பம்

விமானிகள் இன்றி வானில் பறக்கும் பயணிகள் விமானத்தை வடிவமைக்கும் பணி ஆய்வில் இருப்பதாக போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஓட்டுநரின்றி கார், பேருந்து போன்றவை தற்போது தயாரிக்கப்பட்டு சோதனை ஓட்டம் செய்யப்பட்டு வருகின்றது.

இதேபோன்று விமானிகளின்றி வானில் பறக்கும் பயணிகள் விமானத்தை வடிவமைக்கும் தொழில்நுட்பம் ஆய்வில் இருப்பதாக போயிங் நிறுவனத்தின் துணை தலைவர் மைக் சின்நெட் தெரிவித்துள்ளார்.

பிரான்சின் பாரிசிஸ் நடைபெற்றுவரும் விமானக் கண்காட்சியின் போதே இதனை குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில், இதன் அடிப்படை கட்டமைப்பு ஏற்கனவே உள்ளது, எனினும் சுயமாக பறக்கின்ற இத்தகைய விமானங்கள் பாதுகாப்பு தரக்கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட வேண்டும், ஏதேனும் அவசரமாக தரையிறங்க வேண்டும் என்ற பட்சத்தில் அந்த சூழலை விமானங்கள் நிறைவேற்றுமா? என்பது தெளிவாகவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Tags: ,