
நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில்,வரவு செலவுத்திட்டத்தின் வாக்கெடுப்பிற்கு முன்னர் கட்சி கூடவுள்ளது. கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானத்திற்கு அமைய நாங்கள் செயற்படுவோம். தற்போதைய அரசாங்கத்துடன் எவ்விதமான உடன்பாடுகளும் இல்லை. எமது கட்சிக்கும் இல்லை.
அந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அனைத்து அபிவிருத்தி வேலைத்திட்டங்களிலும் நாங்களும் பங்கெடுத்தோம்.
வரவு செலவுத்திட்டம் சம்பந்தமாக நான் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றினேன். எமது நிலைப்பாட்டை கூறி இருக்கின்றோம்.
எனினும் வாக்களிப்பது சம்பந்தமாக எமது கட்சி ஞாயிற்றுக்கிழமை கூடி தீர்மானிக்கும். கட்சியில் எடுக்கப்படும் முடிவுக்கு அமைய எமது தீர்மானம் அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!