மாவீரர் நினைவேந்தல் – கிளிநொச்சி நீதிமன்றமும் தடையுத்தரவு!

மாவீரர் நாள் நினைவேந்தலிற்கு கிளிநொச்சி நீதிமன்றிலும் தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொலிஸாரால் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் இவ்வாறு தடையுத்தரவு நேற்று பெறப்பட்டுள்ளது.

எதிர்வரும் 27ம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தடையுத்தரவுகள் பெறப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொலிஸாரால், 9 பேருக்கு எதிராக நீதிமன்ற தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதன், கரைச்சி பிரதேச சபை உப தவிசாளர் தவபாலன், கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்களான, சுப்பையா, சிவகுமார், இயேசுதாசன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்க தலைவி கதிர்காமநாதன் கோகிலவாணி ஆகியோருக்கே இவ்வாறு தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.

இதேவேளை தர்மபுரம் பொலிஸாரால் 02 பேருக்கும், அக்கராயன் பொலிஸாரால் 02 பேருக்கும், பளை பொலிஸாரால்18 பேருக்கும் , முழங்காவில் பொலிஸாரால் 04 பேருக்கும், மருதங்கேணி பொலிஸாரால் 09 பேருக்கும், பூநகரி பொலிஸாரால் 07 பேருக்கும், தடையுத்தரவுகள் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!