பூஜித ஜயசுந்தர தொடர்பான குற்றப்பத்திரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  வழக்கின் பிரதிவாதியான   முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர  தொடர்பான   855 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றப்பத்திரம்  கொழும்பு  மூவரடங்கிய  விசேட நீதிமன்றத்தில்  இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நாமல் பலல்லே, ஆதித்ய படபெந்திகே மற்றும் மொஹமட் இர்ஷாதீன் ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது

இதன்போது சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட  குறித்த  குற்றப்பத்திரிகை பிரதிவாதிகளிடம்  வாசிக்கப்பட்டதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!