இந்திய எல்லைக்குள் கிராமத்தை உருவாகும் சீனா: மௌனம் காக்கும் மோடி – காங்கிரஸ் சாடல்!

அருணாசலபிரதேசத்தில் இந்திய பகுதிக்குள் சீனா 2-வது கிராமத்தை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது:- இது தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம். பிரதமர் மோடி உறுதியானவராக, நேர்மையானவராக, வெளிப்படையானவராக இருக்க வேண்டும். ஆனால் அவர் மவுனம் சாதித்து வருகிறார். அவரது மவுனத்தை நாங்கள் கண்டிக்கிறோம். இது மன்னிக்கக்கூடியது அல்ல.

தேசிய ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் பாதிக்கும் இந்த பிரச்சினையில் இருந்து திசைதிருப்ப திட்டமிட்ட வேலை நடக்கிறது. இப்பிரச்சினைக்கு மோடி உடனடியாக தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!