லண்டனில் சடலமாக கிடந்த 14 வயது சிறுவன்: பதறிப்போன குடும்பத்தினர்!

லண்டனில் 14 வயது சிறுவன் ஒருவன் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்து கிடந்த சம்பவத்தில், அந்த சிறுவனின் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Croydon-ல் உள்ள West Croydon இரயில் நிலையம் அருகே, கடந்த வியாழக்கிழமை மாலை உள்ளூர் நேரப்படி மாலை 6.40 மணிக்கு சிறுவன் ஒருவன் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிசார், மருத்துவ குழுவுடன் சென்றுள்ளனர். ஆனால், அந்த நபர் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளான்.

அதன் பின் பொலிசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், சிறுவனின் பெயர் Jermaine Cools என்பதும், பிரேதபரிசோதனை அறிக்கையில், பல முறை கத்தியால் குத்தப்பட்டதன் காரணமாகவே அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் பொலிஸ் அதிகாரி கூறுகையில், நாங்கள் இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்டு வரும் விசாரணை நல்ல முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இருப்பினும், சம்பவ தினமான வியாழன் மாலை அந்த இரயில் நிலையம் அருகே நடந்த இந்த சம்பவம் தொடர்பான சண்டை குறித்து யாரேனும் பார்த்திருந்தால், வீடியோ எடுத்திருந்தால், உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்த சிறுவனின் குடும்பம், இந்த சம்பவத்தால் கடும் அதிர்ச்சியிலும், வேதனையிலும் உள்ளனர். இதற்கு காரணமான நபரை நாங்கள் அடையாளம் காண வேண்டும். எனவே உங்களால் உதவ முடிந்தால், பொலிசாரை தொடர்பு கொள்ளும்படி கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்த 2021-ஆம் ஆண்டில் தலைநகரான லண்டனில் பதின்ம வயதினர் மரணமடைந்து வருவது அதிகரித்து வருகிறது. இது 27-வது மரணம், கடந்த 2017-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இது மிகவும் மோசமான உச்ச நிலை என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!