வாடிக்கையாளர்களை எச்சரித்த ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா’!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா திகழ்கிறது. நாடு முழுவதும் 44 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இந்த வங்கிக்கு உள்ளளனர். இந்த வாடிக்கையாளர்களின் நலன் கருதி மிக முக்கியமான அறிவிப்பை தற்போது இவ்வங்கி வெளியிட்டுள்ளது. தங்களது வாடிக்கையாளர்கள் பலர் கேஒய்சி மோசடிகளில் சிக்கி பணத்தை இழப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில், இது தொடர்பாக மீண்டும் ஒரு முறை எச்சரிக்கை செய்துள்ளது.
    
மோசடியாளர்கள் சிலர் வங்கியிலிருந்து அழைப்பதாகக் கூறி பாஸ்வர்டு, ஓடிபி போன்ற விவரங்களைக் கேட்கின்றனர். வாடிக்கையாளர்கள் அதை வழங்கி விட்டால் அதை வைத்து வங்கிக் கணக்கிலிருந்து பணத்தைத் திருடி விடுகின்றனர். எனவே வாடிக்கையாளர்கள் யாரும் தங்களது வங்கிக் கணக்கு விவரங்களை யாரிடமும் வழங்க வேண்டாம் என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா எச்சரிக்கை செய்துள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் “ஷேரிங் என்பது கேரிங் இல்லை” எனவும், வங்கிக் கணக்கு விவரங்களை யாரிடமும் வழங்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது. குறிப்பாக, ஏடிஎம் PIN நம்பர், UPI நம்பர் போன்றவற்றை யாருக்கும் தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

வங்கிகள் தரப்பிலிருந்து இது தொடர்பாகத் தொடர்ந்து விழிப்புணர்வு வழங்கப்பட்டு வந்தாலும் மோசடிகள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன. வாடிக்கையாளர்கள்தான் கவனமுடன் இருக்க வேண்டும். அண்மைக்காலமாக ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!