நான் இருக்கும் வரை அது நடக்காது: உதய கம்மன்பில சூளுரை

அமைச்சராக தான் பதவி வகிக்கும் வரை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தனியார்மயப்படுத்தப்பட மாட்டாது என எரி சக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே (Hesha Vithanage) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அந்நிய செலாவணியை முகாமைத்துவம் செய்யும் போது, கச்சாய் எண்ணெயை இறக்குமதி செய்து, சுத்திகரிப்பதை விட சுத்திகரிப்பு செய்த எரிபொருளை இறக்குமதி செய்வது இலாபகரமானது.
டொலர் பிரச்சினை ஏற்பட்டால், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மூட நேரிடும் என தான் கடந்த செப்டம்பர் மாதம் கூறியதாகவும் கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை முன்னதாக நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டிருந்த ஹேசா விதானகே, எண்ணெய் சுத்தகரிப்பு ஆலை சம்பந்தமாக நாட்டு மக்களுக்குள் ஒரு சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், அது குறித்த விடயங்களை தெளிவுப்படுத்துமாறு கோரியிருந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!