கிருமிநாசினிளுக்கான தடை நீக்கப்பட்டதன் எதிரொலி ; மஹிந்தானந்த அதிரடித் தீர்மானம்!

கிருமிநாசினிகள் தொடர்பான பதிவாளர் J.A. சுமித், அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

Glyphosate உள்ளிட்ட 5 கிருமி நாசினிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு, நேற்றைய தினம் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

Glyphosate உள்ளிட்ட ஐந்து வகையான கிருமி நாசினிகள் பயன்பாடு மற்றும் அவற்றின் விற்பனையை தடை செய்து 2014 ஆம் ஆண்டில் வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்தது.

இந்தப் பின்னணியில், குறித்த வர்த்தமானியை இரத்தும் செய்யும் வகையில், கிருமிநாசினிகள் தொடர்பிலான பதிவாளர் J.A. சுமித் நேற்றைய தினம் வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே, குறித்த வர்த்தமானி இரத்து செய்யப்பட்டமை தொடர்பில், J.A. சுமித் கிருமிநாசினிகள் தொடர்பான பதிவாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், Glyphosate உள்ளிட்ட 5 கிருமி நாசினிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, நேற்று வெளியிடப்பட்ட வர்த்தமானியை மீளப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே மேலும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!