ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் கைது – வெடித்தது போராட்டம்

ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவரும், மூத்த அரசியல்வாதியான அலெக்சி நாவன்லி கைதிற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்தது.ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளில் அனுமதி பெறாமல் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்ததாக எதிர்க்கட்சித் தலைவரான அலெக்சி நாவன்லி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து அலெக்சியின் ஆதரவாளர்கள் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கியமாக தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்தது.

நாவன்லி ஆதரவாளர்கள் சில பகுதிகளில் வன்முறைகளிலும் ஈடுபட்டதால், நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் ஆயிரத்து 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

30 நாட்கள் தொடர்ந்து அலெக்சி சிறையில் அடைக்கப்படுவார் என்பதால் மீண்டும் போராட்டம் வெடிக்கும் எனவும் அவரின் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

Tags: ,