அமெரிக்காவுக்கு கொடுக்க விடமாட்டேன்!

யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் இயற்கை திரவ எரிவாயு விநியோகத்தின் உரிமையை அமெரிக்காவுக்கு வழங்குவதற்கு தான் ஒருபோதும் இனங்கப்போவதில்லை என தெரிவித்த வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, பெற்றோலிய கூட்டுத்தாபனத்தையும் தனியாருக்கு வழங்க இடமளிக்கபோவதில்லை என்றார்.

பாராளுமன்றத்தின் நேற்றையஅமர்வில் கலந்துகொண்டு வாய்மூல விடைக்கான வினாவுக்குப் பதிலளித்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், யுகதனவி மின் உற்பத்தி நிலையம் வலு சக்தி அமைச்சுக்குக் கீழ் வருவதில்லை. அது வேறோர் அமைச்சுக் கீழேயே வருகிறது. அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பை பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். எனினும், யுகதனவியை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதற்கு இடமளிக்கப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!