உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – உரிய நீதி வழங்காமை கவலையளிக்கிறது என்கிறார் மெல்கம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரண்டரை வருடங்கள் கடந்துள்ள போதிலும் இதுவரை உரிய நீதி வழங்காமை மிகவும் கவலையளிப்பதாக கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

வாதுவை பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டின் அரசியலமைப்பையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதாக வாக்குறுதி வழங்கியவர்கள் இன்று பாராமுகமாக செயற்படுவதாகவும் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அத்துடன் தாக்குதல் தொடர்பிலான புலனாய்வு தகவல்கள் கிடைக்கப்பெற்ற போதிலும் அனை தடுப்பதற்கு தவறியுள்ளமை மிகவும் கவலையனிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!