
இந்நிலையில், இதன் வழக்கு விசாரணை இன்று London Coroner’s நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறுவன் கடந்த ஏப்ரல் மாதம் தெற்கு லண்டனில் உள்ள Ark Globe Academy in Elephant and Castle செல்லும் வழியில் பேருந்தில் இருந்து இறங்கியுள்ளான்.
அதன் பின் அங்கிருக்கும் தேம்ஸ் ஆற்றின் பாலத்தின் மீது ஏறி குதித்துள்ளான். சிறுவன் குதித்த எட்டு நாட்களுக்கு பிறகு, அதாவது ஏப்ரல் 20-ஆம் திகதி சடலமாக கண்டுபிடிக்கப்பட்டான்.
சிறுவன் குதிப்பதைப் பார்த்த அங்கிருந்தவர்கள், உடனடியாக உதவுவதற்கு, உயிர் மிதவைகளை வீசியுள்ளனர். மற்றவர்கள் ஆற்றில் இறங்கியுள்ளனர். ஆனால் சிறுவனை காப்பாற்ற முடியவில்லை.
ஒரு வாரத்திற்கு பிறகு சிறுவனின் பள்ளி சீருடையுடன் சடலமாக மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட சடலத்தை பிரேதபரிசோதனை செய்த போது, சிறுவன் தண்ணீரில் மூழ்கியதன் காரணமாக உயிரிழந்துள்ளான் என்பது உறுதியானதாக தெரிவிக்கப்பட்டது.
வழக்கின் விசாரணையை கேட்டறிந்த நீதிமன்றம், திகதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!