மல்லையா மீது 5000 பக்க குற்றப்பத்திரிகை

தொழிலதிபர் விஜய் மல்லையா மீது அமலாக்கத்துறை மும்பை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளிடமிருந்து சுமார் 9,000 ஆயிரம் கோடி ரூபாய் கடனாகப் பெற்று திருப்பிச் செலுத்தாதவர் தொழிலதிபர் விஜய் மல்லையா. தற்போது லண்டனில் தங்கி இருக்கும் அவரை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இதையடுத்து, இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில், விஜய் மல்லையாவுக்கு எதிராக, அமலாக்கத்துறை அதிகாரிகள் மும்பை நீதிமன்றத்தில் 5000 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.

Tags: ,