ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் – முன்னாள் ஜனாதிபதி விசேட அறிக்கையொன்றை சமர்ப்பிக்க வேண்டும்

ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல் அல்லது அழுத்தங்களுக்கு சமகால அரசாங்கம் ஒருபோதும் அனுமதி வழங்காது. நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகையில் பிரசுரமான செய்தி தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

இன்று பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, நெத் எஃப்.எம் ஊடகத்தின் மீது மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்களை நிறுத்தும்படி எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதிலளித்தார்.

நெத் எஃப்.எம் வானொலியில் ஒலிபரப்பான ஒரு நிகழ்ச்சி தொடர்பில் பிரதி அமைச்சர் பாலித்த தேவரப்பெரும கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை செய்துள்ளார். இந்த முறைப்பாடு தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இது ஒரு அச்சுறுத்தல் அல்ல என்றும் இது ஒரு முறைப்பாட்டுக்கான விசாரணையாகவே அமைந்துள்ளது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!