அதிகாரிகளால் நிர்வாகச் சீர்கேடுகள்: நாடாளுமன்றில் சுட்டிக்காட்டிய சித்தார்த்தன்

அதிகாரிகளால் ஏற்படுத்தப்படுகின்ற நிர்வாகச் சீர்கேடுகள், இதனால் மக்களுக்கு செல்ல வேண்டிய நன்மைகள் அற்றுப் போகின்ற நிலைமைகள் இவற்றை பற்றி எவருமே கதைப்பதும் இல்லை, கேட்பதும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் (Tharmalingam Sitharthan) தெரிவித்துள்ளார்.

அதை இந்த அரசாங்கமாவது சீர் செய்ய முயற்சிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறித்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!