
புதைக்கிழமை பிற்பகல், ஆங்கிலக் கால்வாயை காற்று நிரப்பப்பட்ட படகைக் கொண்டு கடக்க முயன்றபோது, ஐந்து பெண்கள் மற்றும் ஒரு சிறுமி உட்பட குறைந்தது 31 புலம்பெயர்ந்தோர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பிரான்ஸ் மேயர் ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கலேஸ் பகுதியில் இந்த படகு கவிழ்ந்ததில், மேலும் பலர் காயமடைந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்த வழியில் பிரித்தானியாவை அடைய முயலும் புலம்பெயர்ந்தோர் சம்பந்தப்பட்ட மிக மோசமான விபத்து இது என்று நம்பப்படுகிறது.
படகில் 34 பேர் இருந்ததாக அறியப்படுகிறது. அதில் ஒருவர் காணாமல் போன நிலையில், 31 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர் மற்றும் 2 உயிர் பிழைத்தவர்களை அதிகாரிகள் கண்டுபிடித்ததாக தெரியவந்துள்ளது.
தகவல்களின்படி, இந்த சம்பவம் தொடர்பாக நான்கு புலம்பெயர்ந்த கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் நீரில் உடல்களைப் பார்த்த ஒரு மீனவர் எச்சரிக்கையை எழுப்பினார், மீட்புப் பணியின் பின்னர் உடல்களையும், உயிர் பிழைத்தவர்களையும் மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Cabinet Office Briefing Rooms (COBR) பெயரால் நடத்தப்படும் சந்திப்புகள் கோப்ரா (Cobra) சந்திப்புகள் என அழைக்கப்படுகிறது. மேலும் அவை தேசிய அல்லது பிராந்திய நெருக்கடிகளுக்கு அரசாங்கத்தின் பதிலை ஒருங்கிணைக்கப் பயன்படுகின்றன, அல்லதுபிரித்தானியாவுக்கு முக்கிய தாக்கங்களை ஏற்படுத்தும் வெளிநாட்டு நிகழ்வுகளின் போது இந்த சந்திப்பு நடத்தப்படுகிறது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!