இங்கிலாந்தில் பாரிய தீ விபத்து: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பிரித்தானியாவில் ஹல் நகரம் அருகே ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டதில், நகரம் முழுவதும் தீப்பிழம்புகள் மற்றும் பெரிய புகை மூட்டங்கள் ஏற்பட்டுள்ளன. இங்கிலாந்தில், ஹல் நகர மையத்திற்கு மேற்கே சுமார் 8 மைல் (13 கிமீ) தொலைவில் உள்ள Hessle அருகே உள்ள பிரிட்ஜ்வுட் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. அப்பகுதியில் பலத்த சத்தம் கேட்டதாக அருகில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
    
ஹம்பர்சைட் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை, சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர். அவர்கள், தீவிபத்துக்கு சுற்றி உள்ள பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் தங்கள் விடுகளின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைக்குமாறு அறிவுறுத்தியயுள்ளனர்.

மேலும், பட்ஃபீல்ட் சாலையில் உள்ள பல வீடுகள் காலி செய்யப்படுவதாக பிபிசி-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hessle-ல் வசிக்கும் Anthony Whitley என்பவர், Saxon Way அருகே உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையின் மேற்கூரை தீப்பற்றி எரிவதைக் கண்டதாகக் கூறினார்.

மேலும் அங்கிருந்த மக்கள் பலர், அங்கு பலத்த சத்தங்கள் மற்றும் வெடிப்புகள் கேட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த தீவிபத்து காரணமாக வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்காக உள்ளூர் தேவாலய மண்டபம் திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்ஜ்வுட் பிளாஸ்டிக் தொழிற்சாலை 2009-ல் தொடங்கப்பட்டது, அது முன்பு தாம்சன் பிளாஸ்டிக் என்ற பெயரில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!