“உங்களுக்கு பைத்தியமா” கடும் கோபமடைந்த சந்திரிக்கா

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க(Chandrika Kumaratunga), அரசியல் ரீதியாக கேள்வி ஒன்றை எழுப்பிய செய்தியாளர் ஒருவரை சாடியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இந்த நிகழ்வு பொரள்ளை பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தற்போதைய அரசியல் சம்பந்தமாக செய்தியாளர் ஒருவர் முன்னாள் ஜனாதிபதியிடம் கேள்வி ஒன்றை எழுப்பியதால், அவர் சற்று கோமுற்றார். மீண்டும் இரசாயன பசனை இறக்குமதி செய்ய முயற்சிக்கப்படுவது அது பற்றி என்ன கூறுகிறீர்கள் என செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி “இப்படியான இடத்தில் அரசியல் பேச உங்களுக்கு என்ன பைத்தியமா” என செய்தியாளரை பார்த்து கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!