ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகாரிகள் இலங்கை விஜயம்

எதிர்வரும் ஜனவரி மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
ஆணைக்குழுவின் இரண்டு சிரேஸ்ட அதிகாரிகள் இவ்வாறு இலங்கை விஜயம் செய்ய உள்ளனர். குறித்த அதிகாரிகள் நாட்டின் எந்தவொரு பாகத்திற்கும் விஜயம் செய்ய அனுமதிக்கப்படுவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் முறைமையுடன் இணைந்து செயற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு சிவில் சமூகங்களுடனும் அரசாங்கம் இணைந்து செயற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சிவில் சமூக அமைப்புக்களுடன் எதிர்வரும் சனிக்கிழமை சந்திப்பு ஒன்றை நடாத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!