
இதன்படி பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக L M D தர்மசேன புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னாள் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித ஓய்வு பெறவுள்ள நிலையில் புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை பரீட்சைகள் நடத்துவதற்கான முறைகள், மற்றும் பரீட்சை முடிவுகளை வெளியிடுவதில் ஏற்பட்ட சிக்கல் நிலைமை காரணமாக சனத் பூஜிதவை அரசாங்கம் பதவியிலிருந்து நீக்கவுள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!