6 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கை வரத் தடை!

6 நாடுகளில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவிக்கின்றது. தென் ஆபிரிக்கா, நமீபியா, சிம்பாப்வே, போட்ஸ்வானா, லெசோத்தோ மற்றும் எசுவாத்தினி ஆகிய 6 நாடுகளிலிருந்தே இலங்கைக்கு வருகைத் தர தடை விதிக்கப்பட்டுள்ளது.
    
எதிர்வரும் 14 நாட்களுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை குறிப்பிடுகின்றது. இதேவேளை, குறித்த நாடுகளிலிருந்து எவரேனும் வருகை தந்திருக்கும் பட்சத்தில், அவர்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!