
அவர் கூறுகையில், அ.தி.மு.க தரப்பிலிருந்து இனி இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீட்டுக்குச் செல்ல முடியாது. அரசுதான் மேல்முறையீடு செய்ய முடியும். தி.மு.க அரசு மேல்முறையீட்டுக்குச் செல்லாது என எதிர்பார்க்கிறோம்.
வேதா நிலையம் இல்லத்தை அ.தி.மு.க-வின் கோயில் எனச் சில அமைச்சர்கள் கூறியுள்ளனர். அவர்களின் உணர்வைப் புண்படுத்த விரும்பவில்லை. மூன்று வாரங்களுக்குள் சாவியை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனச் சொல்லியிருக்கிறார்கள்.
வருமான வரி உள்ளிட்ட சில வரிகள் செலுத்த வேண்டும். அனைத்து சட்டரீதியிலான நடவடிக்கைகள் மற்றும் சில சடங்குகளைச் செய்துவிட்டு தை மாதம் வீட்டுக்குச் செல்ல முயற்சிகளை எடுப்போம் என கூறியுள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!