பிரான்சிலிருந்து இங்கிலாந்து நோக்கிச் சென்ற படகு விபத்தில் சிக்கியது: 31 அகதிகள் பலி!

பிரான்சிலிருந்து இங்கிலாந்தை அடைய ஆங்கில கால்வாய் வழியாக பயணிக்க முயன்ற படகு விபத்துக்குள்ளானதில் 31 அகதிகள் பலியாகியுள்ளனர் என பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புலம்பெயர்ந்தவர்களுக்கான பாதையாக ஆங்கில கால்வாய் உருவெடுத்த முதல் நிகழ்ந்த மிக மோசமான பேரழிவு இது எனப்படுகிறது.
   
ஆங்கில கால்வாய் மயானமாக மாறுவதை பிரான்ஸ் அனுமதிக்காது என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் தெரிவித்துள்ளார்.

“மனிதாபிமானம், ஒவ்வொரு நபரின் கண்ணியத்திற்கும் மரியாதை அளித்தல் என்பது ஐரோப்பாவின் விழுமியங்களாகும்- அவை துக்கத்தில் உள்ளன,” என குறிப்பிட்டுள்ள பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் புலம்பெயர்வு சவாலை எதிர்கொண்ட ஐரோப்பிய அமைச்சர்களின் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

இந்த நிலையில், இந்த விபத்திற்கு நேரடி தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டர்மேனின் தெரிவித்திருக்கிறார்.

வடக்கு பிரான்சின் Dunkrik பகுதியில் இருந்து சுமார் 50 அகதிகளுடன் சென்ற படகே இவ்விபத்தில் சிக்கியுள்ளது.

“கடலில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு குறித்து நான் பெரும் அதிர்ச்சியும் ஆழ்ந்த வருத்தமும் அடைந்துள்ளேன்,” எனத் தெரிவித்துள்ளார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் குறிப்பிட்டுள்ளார்.

பிரெஞ்சு அதிகாரிகளின் கணக்குப்படி, இந்த ஆண்டு தொடங்கியது முதல் 31,500 பேர் இங்கிலாந்துக்கு செல்ல முயற்சித்திருக்கின்றனர். இதில் 7,800 பேர் கடலிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!