பாடசாலைகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை

எதிர்வரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய இந்த ஆண்டு நத்தார் பண்டிகையை முன்னிட்டு பாடசாலைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

டிசம்பர் 23 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரையான 4 நாட்களுக்கே இவ்வாறு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நத்தார் விடுமுறைக்குப் பின்னர் டிசம்பர் 27 ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!