கனடாவில் சிகிச்சைக்காக சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

கனடாவில் பெண் ஒருவரை கொடூரமாக தாக்கி, அத்துமீறிய மசாஜ் சிகிச்சையாளருக்கு ஹாலிஃபாக்ஸ் நீதிமன்றம் தண்டனை அறிவித்துள்ளது. கனடாவின் Dartmouth பகுதியை சேர்ந்த 35 வயதான ஸ்டீவன்ஸ் என்பவர் மீது துஸ்பிரயோகம், வன்முறை, பலவந்தப்படுத்துதல், மூச்சுத்திணறடித்தல், கழுத்தை நெரித்தல், உதவி மறுத்தல் ஆகிய பிரிவுகளில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்த வழக்குகளில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012 மற்றும் 2013ல் தொடர்புடைய சம்பவம் நடந்துள்ளது. தமது குடியிருப்பிலேயே மசாஜ் சிகிச்சையை முன்னெடுத்து வந்துள்ளார் ஸ்டீவன்ஸ்.

இந்த நிலையிலேயே தம்மிடம் சிகிச்சைக்காக அனுமதித்துள்ள பெண் ஒருவரை ஸ்டீவன்ஸ் துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கியுள்ளார்.

மருத்துவர் என்ற முறையில் தாம் அவரை நம்பியதாகவும், ஆனால் அந்த நம்பிக்கையை ஸ்டீவன்ஸ் தவறாக பயன்படுத்திக்கொண்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

ஸ்டீவன்ஸ் தமது டி.என்.ஏ மாதிரிகளை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், துஸ்பிரயோக வழக்குகளில் சிக்கியவர் என்ற பதிவேட்டில் அவரது பெயர் அடுத்த 20 ஆண்டுகளுக்கு இடம்பெறும் எனவும், 10 ஆண்டுகளுக்கு அவரால் ஆயுதங்கள் எதையும் கைவசம் வைத்திருக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!