தென் ஆப்பிரிக்க நாட்டு மக்களுக்கு தடை விதித்த கனடா!

ஏழு தென் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கனடா தடை விதித்துள்ளது. தென் ஆப்பிரிக்க நாடுகளில் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் என்றழைக்கப்படும் வீரியம் மிக்க கொரோனா மாறுபாடு தற்போது பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்டு வருகிறது.
    
இந்நிலையில், புதிய ஒமிக்ரான் கொரோனா மாறுபாட்டின் பரவலைத் தடுக்க சமீபத்தில் ஏழு தென் ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சென்ற வெளிநாட்டுப் பயணிகளுக்கு கனடா தனது எல்லைகளை மூடுகிறது என்று சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு குடிமக்கள் கடந்த 14 நாட்களில் தென் ஆப்பிரிக்கா, நமீபியா, லெசோதோ , போட்ஸ்வானா எஸ்வதினி, ஜிம்பாப்வே, மொசாம்பிக் ஆகிய ஏழு இடங்களில் ஏதேனும் ஒரு இடத்திற்குச் சென்றிருந்தால் அவர்கள் நாட்டிலிற்குள் நுழைய தடை என கனடா அறிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, நாடு திரும்பும் கனேடியர்கள் மீண்டும் உள்ளே அனுமதிக்கப்படுவதற்கு முன்பு சோதனை செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!